26 August 2009

1
கிரிக்கெட் - சில சுவையான தகவல்கள் - பாகம் 2

கிரிக்கெட் உலகத்துல சுவையான செய்திகளுக்கு பஞ்சமே இல்ல. அதுல எனக்கு தெரிஞ்ச சில தகவல்கள் இதோ....

1. T20, ODI, டெஸ்ட் இப்படி கிரிக்கெட்டின் மூன்று பரிணாமங்களிலும் சதம் அடித்த ஒரே வீரர், மேற்க்கிந்திய தீவுகளின் கிறிஸ் கெயில்.

2. இங்கிலாந்துக்கும் மேற்க்கிந்திய தீவுகளுக்கும் ஸ்கார்போரோ வில் நடந்த போட்டி. அப்போது ஹோல்டிங் எல்லைக் கோட்டில் இருந்து வீசிய பந்து, ஒரு பக்க ஸ்டம்புகளை அடித்து அதே வேகத்தில் சென்று மறு பக்க ஸ்டம்புகளையும் அடித்தது. கிரிக்கெட் வரலாற்றில் இவ்வாறு நடந்தது இதுவே ஒரே முறை.


3. ரமீஸ் ராஜா ஒரு முறை நோ-பாலில் பிடிபட்டார். அம்பயர் கூறிய நோ-பால் அறிவிப்பை சரியாக கேட்காமல் பெவிலியன் சென்று விட்டார். இறுதியில் அவர் ரன் அவுட் ஆகியதாக ஸ்கொயர் லெக் அம்பயர் அறிவித்தார்.


4. தான் விளையாடிய டெஸ்ட் போட்டிகளில் தான் எடுத்த விக்கெட்டுகளை விட குறைவான ரன்களை எடுத்த ஒரே வீரர் இந்தியாவின் பகவத் சந்திரசேகர்.


5. உலகின் மிக நீளமான கிரிக்கெட் போட்டி, இங்கிலாந்திற்க்கும் தென் ஆப்பிரிக்கவிற்க்கும் இடையே 1939ஆம் ஆண்டு டர்பனில் நடந்த 14 நாள் போட்டியே ஆகும். 14 நாட்கள் நடந்தும் போட்டி முடியவில்லை. அதற்கு அடுத்த நாள் இங்கிலாந்து அணி கிளம்ப வேண்டிய கப்பல் புறப்பட இருந்ததால் போட்டி முடித்துக்கொள்ளப் பட்டது. போட்டி முடியும் போது இங்கிலாந்து அணி ஐந்து விக்கெட் கைவசம் உள்ள நிலையில் 42 ரன் வெற்றிக்கு தேவைப்பட்டது.

6. உலகில் நான்கு டெஸ்ட் தொடர்கள் மட்டுமே 0-0 என்ற சமநிலையில் முடிந்துள்ளன. அதில் மூன்று தொடர்களில் இந்தியா உள்ளது.

7. டெஸ்ட் போட்டியின் ஒரே நாளில் அதிக ரன் குவித்த வீரர் சர் டான் ப்ராட்மேன். இங்கிலாந்திற்க்கு எதிராக லீட்ஸ் மைதானத்தில் அவர் எடுத்த ரன்கள் 309


8. இதுவரை 228 ரன்களில் யாரும் ஆட்டம் இழந்தது இல்லை.

9. கிரஹாம் யெல்லோப் (Graham Yallop). இவர் தான் கிரிக்கெட்டில் முதன் முதலாக ஹெல்மெட் அணிந்தவர்.


10. டெஸ்ட் மற்றும் ஒருநாள், இரண்டிலும் ஹாட்-ட்ரிக் சாதனை படைத்த முதல் மற்றும் ஒரே வீரர் பாகிஸ்தானின் வாசிம் அக்ரம்.


11. ஒரு பேட்ஸ்மேன் அவுட் ஆவதற்க்கான பத்து வழிகள்

1. கேட்ச்
2. போல்ட்
3. எல்.வி.ட்பில்யூ
4. ஹிட் விக்கெட்
5. டைம் அவுட்
6. பந்தை கையால் தொடுதல்
7. பீல்டிங் செய்வதை தடுத்தல்
8. பந்தை இருமுறை அடித்தல்
9. ரன் அவுட்
10. ஸ்டம்பிங்





Blog Widget by LinkWithin

Add-tamil



tamil10

ரேங்க் கார்டு

Tamil 10 top blogs Tamil Top Blogs My BlogCatalog BlogRank Paraparapu.com Top Sites